முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம் செய்ய வருகின்றனர் திருவிழா கால நாட்களில் பல லட்சம் பேர் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர் இந்த நிலையில் தூத்துக்குடி வழக்கறிஞர் ராஜசேகர் சுப்பையா செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன் எனது மனைவியும் வழக்கறிஞராக தான் உள்ளார் நான் குடும்பத்தினருடன் கடந்த ஆறாம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் விரைவு தரிசனம் கட்டணம் நூறு ரூபாய் வீதம் 3 பேருக்கு 300 ரூபாய் தரிசன சீட்டு வாங்கிவிட்டு 7. 35 மணி அளவில் தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றேன் காலை 9. 10 மணி அளவில் தான் சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது நான் வாங்கி சென்று இருந்த மாலையை கோவிலில் இருந்த போத்தி யிடம் கொடுத்தேன் அப்போது அருகில் நின்ற கிரி சுந்தரர் மாலையை சுவாமிக்கு சாத்த விட மாட்டேன் என்று கூறினார். போத்தியிடம் இருந்த மாலையை திரி சுந்தரர் வாங்கி அருகில் உள்ள கம்பியில் போட்டுவிட்டார் இப்படி செய்கிறீர்களே என்று கேட்டதற்கு 100 ரூபாய் கொடுத்தால் மட்டுமே மாலையை சாத்த அனுமதிக்க முடியும் என்று திருசுந்தரர் கூறினார் நான் அதன் பிறகு 100 ரூபாய் கொடுத்து அதன் பிறகு தான் மாலையை திரி சுந்தரர் போர்த்தியிடம் கொடுத்து மாலையை சாமிக்கு போட அனுமதித்தார் இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது மேலும் கோவில் வளாகத்தில் வரும் பக்தர்களிடம் அங்குள்ள திரு சுந்தரர்கள் இலை விபூதி என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவரில் வைத்து முருகர் படம் அர கஜா போட்டு பச்சை மஞ்சள் சிகப்பு கயிறு அடங்கிய பத்து ரூபாய் மதிப்புள்ள பாக்கெட் வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் 100 ரூபாய்க்கு கோவில் வளாகத்தில் சந்தை கடையாக மாற்றி திருசுந்தரர்கள் விற்பனை செய்து வருகின்றனர் ஆகையால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உடனடியாக இதில் தலையிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணி சாமி கோவிலில் திரி சுந்தரர்களின் எல்லை மீறிய செயலை சட்ட விரோத செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்க வேண்டும். முழுக்க முழுக்க திருச்செந்தூர் சுப்பிரமணி சாமி கோவில் திரி சுந்தரர்கள் சந்தை கடையாகவே மாற்றி உள்ளன ஆகையால் உடனடியாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ராஜசேகர் சுப்பையா கூறினார்.
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை எடுப்பாரா… வழக்கறிஞர் ராஜசேகர் பரபரப்பு பேட்டி.