Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்இந்தியா

திமுக எழுச்சி பெறுவதற்கு தமிழகம் முழுவதும் பின் பற்ற வேண்டியவைகள் நடைமுறைக்கு வருமா?

Last updated: May 16, 2026 10:54 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் திமுகவின் தோல்விக்கு தானே பொருப்பேற்பதாக சொன்னதோடு மட்டுமல்லாமல், தோல்விக்கான காரணத்தையும், தீர்வையும் மக்களாகிய நீங்களும் சொல்ல வேண்டும். அதை நான் முழுமையாக படித்து, பரிசீலனைக்குட்படுத்துவேன் என்று கூறினார்.

கட்சி மற்றும் நிர்வாகிகள் அதிகாரம் என்பது மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மட்டுமே குவிந்து இருந்தது. கட்சியின் உத்தரவுகள் முழுமையாக கடைக்கோடி கொண்டனுக்குப் போய் சேரவில்லை. அன்றாட நிகழ்ச்சி நிரல்கள், பிரச்சாரங்கள் எதுவுமே நடை பெறவில்லை. தொடர்ந்து நடத்துவதற்கும் பகுதி மற்றும் ஒன்றிய, வார்டு நிர்வாகிகளிடம் போதுமான வருவாய் கிடையாது. கட்சியின் வருவாயையும், அதிகாரத்தையும் பரவலாக்காமல், ஒரே இடத்தில் மையப்படுத்தப்பட்டது, இந்தப்போக்கு கட்சியின் நிர்வாகிகள் இடையே சோர்வை ஏற்படுத்தியது. சில பல மந்திரிகளைத் தவிர மற்ற மந்திரிகளுக்கோ, சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ, மாவட்ட நிர்வாகிகளுக்கோ, நகரச்செயலாளருக்கோ இயல்பாக வரக்கூடியைக் வருவாயைக்கூட தடுத்து நிறுத்தி, அதையும் மையப் படுத்தியது. இதனால், பகுதிவாரியாக, வார்டுகள் வாரியாக, ஒன்றியம் வாரியாக நடைபெற வேண்டிய கட்சியின் வேலை திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடைபெறாமல் தடைபட்டது. ஒரு வார்டு நிர்வாகியோ, பகுதி நிர்வாகியோ, ஒன்றிய நிர்வாகியோ வருடத்திற்கு ஒரு முறைக்கு மேல் அவரால் செலவு பண்ண முடியாமல் போனது. கால ஓட்டத்தில், ஒன்றிய, நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் மக்களுக்குமான உறவு கொஞ்சம் கொஞ்சமாக துண்டிக்கப்பட்டது. குடும்ப மற்றும் கோவில் விழாக்களுக்கும், இறப்புகளுக்கும் மட்டுமே மாவட்ட நிர்வாகிகள் தங்களின் வீட்டை விட்டு வெளியே வருவார்கள். மற்றபடி அன்றாடம் தாங்கள் பார்க்க வேண்டிய, செல்ல வேண்டிய பகுதிகளுக்குச் செல்லாமல், மாதத்தில் 15 நாட்களுக்கு மேல் சென்னையிலேயே இருந்து விடுவது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நிர்வாகிகளின் நடவடிக்கையும், மக்களின் மனங்களில் இருந்து அந்நியப்படுவதோடு மட்டுமல்லாமல், வளர்ந்து வருகின்ற ஒரு தலைமுறையினரின் மன ஓட்டங்களை புரிந்து கொள்ளாதவர்களாகவும், இருக்கிறார்கள். ஒரு சில சித்து விளையாட்டுக்களின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம், என்கின்ற காரணத் தினாலேயே அல்லது அப்படி அவர்கள் நம்புவதாலயே, கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற மனோபாவம், ஒவ்வொரு நிர்வாகியின் மனதிலும் ஆழமாகப் படிந்துக் கிடைக்கிறது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுமே தனக்கு கீழ் உள்ள நிர்வாகிகளை ஏதோ ஒரு காரணத்தினால், சூழ்நிலைக்கைதிகளாக வைத்திருக் கிறார்களே ஒழிய, அவர்களை சுதந்திரமாக, இவர்கள் ஒரு காலமும் செயல்படவிட்டதே கிடையாது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் சென்னையில் அமர்ந்துக் கொண்டு, செல்வாக்குள்ள யாரோ ஒரு தலைமை நிர்வாகியை கைக்குள் வைத்துக் கொண்டு, தனது சொந்த கட்சிக்காரர்களுக்கு எதிராகவே ஒரு லாபியை உருவாக்குவது. எந்த ஒரு மாவட்டம் சார்ந்த சமூக சிக்கல்களிலையும், அந்தந்தப் பகுதி மாவட்ட நிர்வாகிகளிடமும் அதுத் தொடர்பான கருத்தைக் கேட்காமல், அவர்களை களத்திற்கு அனுப்பாமல், உளவுத்துறையின் அறிக்கையை மட்டும் கணக்கில் எடுத்துகொண்டது. காலமாற்றம் மற்றும் அதன் வழி வரும் சிந்தனை மாற்றம், இளைய தலைமுறையின் மன ஓட்டம், இவை களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஒரு சமூகம் மாறி வருகிறது என்பதைக்கூட உணர முடியாமல், பழைய பண்ணையார் மனநிலையிலேயே மக்களை அணுகுவதும், கொச்சையான வார்த்தைகளை பேசுவதுமான மந்திரிகளின் போக்கை மக்கள் ரசிக்கவில்லை. இதுபோல இன்னும் பல்வேறு விஷயங்கள் நாகரீகம் கருதி இங்கேத் தவிர்க்கப்படுகிறது

அரசும், நிர்வாகமும் திராவிடம், சமூக நீதி என்று பேசக் கூடிய அரசு, தங்களைச் சுற்றியுள்ள அதிகாரிகள், இந்துத்துவ மனநிலை கொண்டவர்களாக இருப்பதை கவனிக்கத் தவறியது. மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடைவெளி அதிகமானது. என்னதான் அரசு சிறப்பாக செயல் பட்டாலும், அரசின் திட்டங்களை கொண்டு போய் சேர்க்கும் எந்த ஒரு அதிகாரியும், மக்களிடம் கனிவாக நடந்து கொள்வதில்லை. மற்ற துறைகளைவிட, காவல் துறை என்பது மக்களிடம் நேரடியாக தொடர்பு வைத்திருக்கும் ஒரு துறையாகும். எனவே, தமிழ்நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு தகுந்தார் போல காவல்துறையின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. காவல்துறையின் பணிச்சுமை காரணமாக ஒவ்வொரு காவலர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, தங்களின் கனிவுத்தன்மையை இழந்திக்கிறார்கள். எனவே இவர்களால் இயல்பாக மக்களிடம் அணுக முடியவில்லை என்பது மட்டுமல்ல, தங்களின் குடும்பத்தினரிடம் கூட இவர்களால் இயல்பாக இருக்க முடிய வில்லை. இதனால், காவல்துறையில் தற்கொலைகள் அதிகம் நடை பெறும் சூழல் உருவாகி வருவதை கணக்கில் கொள்ளாதது. ஒரு தேசத்தில் 30க்கும் மேற்பட்ட விழுக்காட்டு மக்கள், அரசின் மீது அதிருப்தி கொள்வதற்கு காவல் துறையின் செயல்பாடே முக்கியக் காரணமாக அமைகிறது. கடந்த அரசு, மாதம் ஒரு நலதிட்டம் என்கின்ற வகையில், எகப்பட்ட நலத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஆனால் எந்த திட்டத்திற்கும் தனியாக ஒருதுறையையோ, அதற்கான புதிதாக ஊழியர்களையோ நியமிக்க வில்லை. ஏற்கனவே பற்றாக்குறையில் இருக்கும் அரசு ஊழியர்களையே, புதிது புதிதாக அறிவிக்கும் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது அவர்களைப் பனிச்சுமையில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு அரசு ஊழியர்களும், மூன்று நபர்கள் பார்க்க வேண்டிய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பணிச்சுமை என்பது, அரசு ஊழியர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பாதிப்புக்கு உட்படுத்துகிறது. அவர்களால் ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை வாழ முடியாமல் மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இதன் காரணமாகவே அரசு ஊழியர்கள் என்றாலே திமுக ஓட்டர்கள் தான் என்கின்ற நிலை மாறி, திமுகவிற்கு எதிரான மன நிலையை கட்டமைத்து விட்டிருக்கிறது. இப்படியான போக்கை இதுவரை சிந்திக்காமலும், பரிசீளிக்காமலும், மக்கள் நல திட்டங்களை இயந்திரகதியில் நடை முறைப்படுத்தியது எதிர் மறையாக மாறியது.

ஆட்சியும் வியூகங்களும் ஒரு அரசை, மக்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுப் பற்றி யாரும் இங்கே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது அது இவர்களுக்கு புரியவில்லை என்பதும் நமக்கு புரிய வில்லை. எனவே அதை இங்கே நினைவூட்டுகிறோம் ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு முக்கியக்காரணம், சாலை, சாக்கடை, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சுகாதாரம், நகரகட்டமை ப்பு, தொழில் பெருக்கம், சுற்றுச் சூழல், தனிநபர் வாழ்க்கை வசதி உயறுதல், சட்டம் ஒழுங்கு, இட ஒதுக்கீடு, சமூகநீதி, ஜனநாயகம் போன்ற காரணிகளுக்காகத்தான் ஒரு அரசை மக்களே சேர்ந்து தேர்ந்தெடுக்கிறார்கள். அதேபோல, மத்திய தேர்தலுக்கு மத்தியில் உள்ளவர்களையும், மாநிலத்தேர்தலுக்கு மாநிலத்தில் உள்ளவர்களையும் எதிர்த்து அரசியல் செய்வது. எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் எனக்கு சமமானவர் இல்லை என்கின்ற பண்ணையார் மனநிலையும் மற்றும் ஏஜன்சிகளின் தவறான வழி காட்டலினால் மத்தியஅரசை எதிர்த்து முழுநேரமும் அரசியல் செய்ததும், இது தவறான வீயூகம் மட்டுமல்ல ஒரு வரலாற்று பிழையும்கூட ஏஜென்சிகள் சொல்லிவிட்டார்கள், நாம் மத்திய அரசை எதிர்த்துதான் அரசியல் செய்யவேண்டும் என்கின்ற நிலை வந்தபிறகு, மத்திய அரசுக்கு எதிராக நீங்கள் எதை முன்வைப்பீர் கள்? வேறு வழியே இல்லை இந்துத் துவாவையும், சனாதனத்தையும் தான் நீங்கள் முன்வைக்க வேண்டும். மத்தியில் பலமாக இருந்தாலும் மாநிலத்தில் பிஜேபி என்பது ஒரு குரங்குழுவாதக்கட்சி தான். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தாலே உட்கட்சி முரண்பாடுகளால் அது காணாமல் போயிருக்கும். வெறும், மூன்று விழுக்காட்டிற்கும் குறைவான ஓட்டு வாங்கியைக் கொண்ட பிஜேபி தான் தனக்கு சமமான எதிரி என்று மக்களிடம் அடையாளம் காட்டுவதன் மூலம் 12 விழுக்காடு என்கின்ற அளவிற்கு பிஜேபியின் ஓட்டு வங்கியை திமுக வளர்த்து விட்டதை மக்கள் ரசிக்க வில்லை. இதை இயக்கவாதிகள்கூட சுட்டிக்காட்டவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, மக்கள் பாசிசத்தையோ, பாஜகவையோ ஏற்றுக்கொண்டது கிடையாது. பார்ப்பன மற்றும் சனாதன எதிர்ப் பிற்கு இந்த மண்ணிற்கென்று ஒரு நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாறு திமுகவால் உருவாக்கப்பட்டது கிடையாது. பார்ப்பன எதிர்ப்பு, சநாதன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு போன்ற வைகளைச்செய்ய வேண்டியது இயக்கங்களின் வேலை. எனவே அவர்களை வைத்து தான் அதைச் செய்திருக்க வேண்டுமே ஒழிய, அதை விட்டுவிட்டு பெரியாரிஸ்டுக ளின் கடைசி நம்பிக்கையான, அவர் களின் கொள்கையையும் பறித்துக் கொண்டது, இயக்க நடவடிக்கைகளை பெரிய அளவில் பலகீனப்படுத்தி விட்டது. இயக்கங்கள் பலகீனமாகவும், இந்துத்துவ பாசிச கும்பல்கள் கேட்பாரற்று ஆட்டம் போட்டனர். அரசின் அனைத்து மட்டங்களிலும், அரசின் அத்தனை நிலைகளிலும் ஊடுருவினர். திட்டமிட்டு அரசிற்கு மக்களிடையே அவப்பெயர்களை உண்டாக்கினார்கள். வேறுவழி இல்லாமல் பெரியாரிஸ் டுகளும் மற்றும் இயக்கவாதிகளும் தேர்தல் அரசியலில் வந்து சிக்கிக் கொண்டார்கள்.திமுக மட்டும்இல்லை என்றால், காக்கா வடையைத்தூக்கிக் கொண்டு போவதுபோல, பிஜேபி தமிழ் நாட்டைத்தூக்கிகொண்டு போய் விடும் என்று உளவியலாக இயக்கவாதிகளை நம்ப வைத்ததன் விழைவு, கடவுள் மறுப்பு மற்றும் பகுத் தறிவுப் பிரச்சாரங்கள் நின்றுப் போயின. இதனால், சமூகம் தனது சமநிலையை இழந்தது. குழந்தைகளுக்கு ஒத்தக் கண்ணன் வருகிறான் பாரு என்று பயமுறுத்தி சோறு ஊட்டுவதைப் போல, தமிழ்நாட்டில் வேர்களே இல்லாத, கட்டமைப்பே இல்லாத, நாலு விழுக்காடு கூட ஓட்டு வங்கி இல்லாத பிஜேபியை காட்டி காட்டி இயக்கவாதிகளின் மனதில் அச்சத்தை விதைத்ததின் விழைவு, தாங்கள் விளையாண்ட களத்தையும், திமுகவிடம் கொள்கையையும் இழந்தவர்கள், சமூக ஊடகங்களில் மூர்க்கமாக இயங்கத்தொடங்கினார் கள். இது மக்களிடத்தில் எதிர்மறை யான விளைவுகளையே ஏற்படுத்தியது. இயக்கங்கள் பலமாக இருந்த வரை, ஆட்சியாளர்களுக்கு எதிரிகள் குறைவாக தான் இருந்தார்கள் என்பதை எடுத்துச்சொல்லும் ஆட்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளாததும் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல, மத்திய அரசு கொண்டுவந்த அத்தனை மக்கள் விரோத திட்டங்களையும் மக்கள் பிரச்சனையாக மாற்றாமல், திமுக வின் சொந்தப்பிரச்சனையாக மாற்றிக்கொண்டது,

அரசும் ஊடகங்களும் கட்சியின், ஆட்சியின் சாதனை களை மக்களிடம் எடுத்துச்சொல்லும் சாளரம் தான் ஊடகம் என்பது. இந்தச் சாளரங்களின் வழியாகத்தான் சாதாரண மக்கள் கூட உலகத்தை தரிசிக்கிறார்கள். தங்களின் பொது அறிவையும் மேம்படுத்திக் கொள்கி றார்கள். இதன் மூலம், உலக அளவி லான தகவல் தொடர்புகளையும், கருத்துருவாக்கங்களையும் எளிய மக்களும் செய்ய முடியும் என்பதை சமூக ஊடகங்கள் நிரூபித்து வருகின்றன. துருக்கியில் எழுந்த புரட்சியும், அதன் மூலம் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்தில் ஏற்பட்ட ஆக்கிரமிப் பாளர்களுக்கு எதிரான கிளர்ச்சியும், இலங்கையில் உணவு பஞ்சத்தினால் ஏற்பட்டக்கிளர்ச்சியும் சமூக ஊடங்க ளின் மூலம் ஏற்படுத்தப்பட்டது தான். அவ்வளவு ஏன் சோசியல் மீடியாவை தடை செய்ததனால் மட்டுமே நேப்பாளத்தை தலை கீழாக ஜென்ஸிக்கள் புரட்டிப் போட்டார்கள். இது எதைப்பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஆய்வுக்கு உட்படுத்தாமல் அச்சு மற்றும் காட்சி மற்றும் சமூக ஊடகங்களை பக்குவ மற்ற நபர்களையும், மனம் போன போக்கிலும் கையாண்டது மிகப் பெரிய தவறாக முடிந்திருக்கிறது. இதை இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், திமுக தோற்றதற்கு முக்கியக்காரணமே ஊடகங்களில் திமுகவை ஆதரிக்கி றேன் என்கின்ற பெயரில், திமுக ஆதரவாளர்களும், இடதுசாரிகளும், பெரியாரிஸ்டுகளும் பேசிய பேச்சுக் களை மக்கள், குறிப்பாக இளைஞர்கள் ரசிக்கவில்லை. பல நூறு கோடிகளை கொட்டிக் கொடுத்து சமூக ஊடகங்களில், பேசுவதற்கான நபர்களை நியமித் தால், அவர்கள் தீப்பொறி ஆறுமுகம் காலத்து மனநிலையில் தான் இருக்கிறார்களேத்தவிர இன்றய ஜென்சிக்களின் உளவியலைப் புரிந்துக்கொண்டு, அதற்குத்தகுந் தாற் போல் திமுகவை, ஆட்சியைக் கொண்டு சேர்க்கவில்லை. ஊடகவியாளர்கள், யூட்யூபர்கள் என அத்தனை பேரும் வீசிய கற்கள் எல்லாம் எதிரணிக்கு மலர்களாக மாறியது. ஆம் இவர்கள் பேசிய பேச்சுக்கள் அத்தனையும் எதிரணிக் கான ஓட்டுக்கலாக மாறியது. அதனால்தான் இவர்கள் பேச்சுக்கு எந்தவித பதிலும் சொல்லாமல், திமுகவின் பணத்தில், திமுகவின் ஆட்களை வைத்தே தனக்கான ஓட்டுக்ககளை அறுவடை செய்துக் கொண்டார்கள் இன்றைய ஜென்சிக்களின் மன நிலையையோ, அவர்களின் வாழ்க்கைச்சூழலையோ, அவர்கள் சமூக ஊடகங்களைக் கையாளும் விதத்தையோ அல்லது இந்தச் சமூகமே ஒட்டுமொத்தமாக வேறு ஒரு நவீனத்தளத்தில் பயணிக்கிறது என்பதையோ இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை. இவர் களை வழிநடத்தும் பென் நிறுவனம் கூட, இதைப்பற்றிய எந்தவித புரிதலும் இல்லாமல் இருந்தது. ஒரு தேர்தலில், 30 விழுக்காடு ஓட்டுக்களை சமூக ஊடகங்கள் தான் தீர்மானிக்கிறது. எனவே அதை நாகரீ கமாகவும், பொறுப்புணர்வோடும், சரியான,நேர்மையான,தர்க்கங்களை முன்வைத்து எதிரணியை வரிக்கு வரி மறுத்து, தனது நியாயத்தை நிரூபிக்க வேண்டியவர்கள், கிண்டலும், கேலியும், அவதூரும், பெண்ணுறுப்பையும் முன்னிறுத்து வதுமான நாகரீகம் அற்ற பேச்சுக்கள், ஒரு நாகரிக சமூகத்தை எப்போதும் வசப்படுத்தாது. உதாரணத்திற்கு, ஒருவர் உப்பு போட்டுதான் சோறு தின்கிறீர்களா என்று கேட்டு, மொத்த IT செக்டார் ஓட்டுக்களையும் திமுகவுக்கு எதிராக திருப்பி விட்டுவிட்டார். திமுகவின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமா யிற்று. இதற்காக அவரும் வருந்த வில்லை, அவருக்கு அந்தப்பணி யைக் கொடுத்த பென் நிறுவனமும் வருந்தவில்லை. ஒருவர் ரசிகர்களை விபச்சாரிகள் என்றார். சரிஅது அவர் இயல்பு. அதைக் கூடநாம் பொறுத்துக் கொள்ளலாம் ஆனால், நேற்வரை பெண் விடுதலையையும், பெண் உரிமையையும், புரட்சியையும் பேசிக் கொண்டிருந்த நபர்கள் எல்லாம் இதை ஆதரித்துப்பேசத் தொடங்கி யதை, ஒரு நாகரிக சமூகமே ஆச்சரியமாக பார்த்தது மட்டுமல்ல, மிக சுலபமாக எதிரணி வெற்றி பெற இது போன்ற வார்த்தைகளும், இது போன்ற நபர்களும் மிக உதவிகரமாக இருந்தார்கள். கொஞ்சம் ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால் உங்களுக்கேப் புரியும், திமுகவை ஆதறிக்கிறேன் என்கின்ற பெயரில், இவர்களெல் லாம் யாருக்கு வேலை செய்தார்கள் என்று. எல்லாவற்றையும் விட மிக முக்கி யமானது, மற்றக்கட்சிகள்போல் இல்லாமல் அதாவது அதிமுகவை எடுத்துக் கொண்டால், அது லீடர் பேஸ்ட்டு பார்ட்டி. இப்படித்தான் இந்தியா முழுவதும் பல்வேறு கட்சி கள் இருக்கின்றன. அதாவது ஒரு தலைவரை முன்வைத்து நடை பெரும் கட்சி. ஆனால், திமுக அப்படி அல்ல. திமுக என்பது கேடர் பேஸ்ட்டு பார்ட்டி. அதாவது தொண்டர்களை அடிப்படையாகக் கொண்ட தொண்டர் களை முன்னிறுத்தும் ஒரு கட்சி. இது சமீப காலங்களாக, கேடர் பேஸ்ட்பார்ட்டி என்பது மாறி, கொஞ்சம் கொஞ்சமாக லீடர் பேஸ்டு பார்ட்டியாக திமுக மாறி வருவது அதன் அடித்தளத்தை அது இழந்து கொண்டிருக்கிறது என்பதையே குறிக்கிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கட்சியை முழுமையாக மறுக் கட்டமைப்பு செய்ய வேண்டும். அரசு ஊழியர்களை எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கக் கூடாது என்றும், பழைய பென்சன் முறையையே அமல்படுத்தப்படும் என்றும் உத்திரவாதம் கொடுக்க வேண்டும். காவல்துறைக்கு சங்கம் வைத்துக் கொள்ள உரிமை வேண்டும். கூடலாக 5 லட்சம் காவலர்களை நியமித்து அவர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். அனைத்து அரசு துறைகளிலும் பெரியாரிஸ்டுகள் மற்றும் இடது சாரிகள் மற்றும் திமுக குடும்பத்தி னர்கள் வாரிசுகளை, திட்டமிட்டு எல்லா இடங்களிலும் பணியில் அமர்த்த வேண்டும். பண்படுத்தாத, பலனளிக்காத கல்வியைக் கொடுப்பதற்கா இத்தனை ஆண்டுகள் பாடுபட்டோம் என்பதை உணர்ந்து, சமூக நீதியை யும், ஜாதி ஒழிப்பு போராட்டங்களை யும் பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும். திராவிட இயக்க வரலாறு பற்றியோ, சமூக நீதி பற்றியோ, ஜாதி ஒழிப்பு பற்றியோ தெரியாத எந்த ஆசிரியரையும் பணியில் நியமிக்க கூடாது. உங்கள் கொள்கை எவ்வளவு தான் உயர்வானதாக இருந்தாலும் அதை நவீனமாக சொல்வதற்கான நபர்களையும், ஒரு பொது வெளியையும் உருவாக்க வேண்டும். அதை இளைஞர்களைக் கொண்டே இளைஞர்களுக்காகச் செய்ய வேண்டும்.

இப்படி இங்கு சொல்ல முடியாத பல்வேறு செய்திகளை, தோல்விக் கான காரணங்களை, மீண்டெழுவ தற்கான வாய்ப்புகளை எல்லாம் பட்டியலிட்டு அனுப்பியிருக்கிறேன். அது மட்டுமல்ல, இதைவிட சிறப்பாக, வேறு யோசனைகள் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தி மீண்டழாவிட்டால், மீண்டும் திமுக ஆட்சிக்கு வர பத்து ஆண்டுகளகும் என்பதையும் எச்சரித்து இருக்கிறேன்.

Share This Article
Email Copy Link Print
Previous Article விஜய் முதல்வராக பதவியேற்ற 6 நாட்களில் தமிழகத்தில் அடுத்தடுத்து 24 கொலைகள் பொதுமக்கள் அதிா்ச்சி
Next Article தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா். திமுக ஆட்சி தொடர உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்!!!

By Dinapuratchi

தூத்துக்குடியில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நலத்திட்டங்கள், அன்னதானம், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் !!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதலை பெருந்தலைவர் மக்கள்நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில் மரியாதை!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?