தூத்துக்குடியில் கலைஞாின் 102 வது பிறந்தநாளையொட்டி 15 லட்சம் மதிப்பீட்டில்
102 பேருக்கு தையல் இயந்திரம் உட்பட
மெகா நலத்திட்ட உதவிகள் : கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பொியசாமி வழங்கினாா்கள்
தூத்துக்குடி, ஜூன் 13
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர திமுக சாா்பில் கலைஞாின் 102வது பிறந்தநாளை யொட்டி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தாா். மேயர் ஜெகன் பொியசாமி, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வரவேற்புரையாற்றினாா்.
விழாவில் 102 பேருக்கு தையல் இயந்திரம் 12பேருக்கு மதிவண்டி 18 பேருக்கு இஸ்தாிபெட்டி 6 பேருக்கு பொிய கிரைண்டா் இரண்டு நபருக்கு சிறிய கிரைண்டா் 8 பேருக்கு தொழில்உதவி, ஊக்க தொகை ஆர்ச் துவக்க பள்ளிக்கு 200 தட்டு டம்ளா் கிாிக்கெட் கிட் உபகரணங்கள் 16 அணிகள் 176 பேருக்கு மொத்தம் 15.50 லட்சம் மதிப்பீல் நலத்திட்ட உதவிகளை வழங்கி கனிமொழி எம்.பி பேசுகையில்
“ வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டிற்காகவும் தமிழா்களுக்காகவும் வாழ்ந்து தாழ்ந்து கிடந்த தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துசென்று தமிழகத்தின் உாிமைக்காகவும் கடைசி வரை பணியாற்றிய கலைஞருக்கு தான் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறோம். அவர் காலத்திலேயே ஓரு கமிஷன் அமைக்கப்பட்டு தமிழகத்தின் உாிமைக்காக அவர்கள் கொடுத்த அறிக்கை மூலம் ஓன்றிய அரசும் மாநில அரசும் கூட்டாட்சி முறையை பாரபட்சமின்றி கடைபிடிக்கவேண்டும் என்று விரும்பியவா் தற்போது ஓன்றிய பிஜேபி அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் பல்வேறு தேவையற்ற சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் அதற்கு எதிராக தொடர்ந்து நாம் போராடும் நிலைக்கு செல்ல வேண்டியுள்ளது. தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி மூலம் பெறப்படுகின்ற நிதியில் மாநில அரசுக்கு தரவேண்டிய தொகையை முறையாக தருவதில்லை. கல்வித்துறைக்கு 2000 கோடி தரவேண்டும். அதை தராததால் மாணவ மாணவிகளின் நலன் பாதிக்கப்படுகிறது. அதை கேட்டால் ஹிந்தியை கட்டாயம் படிக்க வேண்டும். என்று சொல்கிறாா்கள். நம்முடைய முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் நீங்கள் 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் எங்களுக்கு தேவையில்லை கல்வியும் தமிழா்களின் நலனும் முக்கியம் என்று கூறிவிட்டாா்இப்படி பட்ட பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் மாநிலத்தின் உாிமை மக்கள் நலன் என கொள்கை பிடிப்போடு ஓவ்வொரு திட்டங்களை யும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை நிறுத்துவதற்கான வழிவகையை நெருக்கடிகள் மூலம் ஏற்படுத்துகிறது. தமிழக மக்களின் எதிர்காலத்தை பல்வேறு வகையில் பிஜேபி அரசு முடக்கப்பார்க்கிறது. அந்த காலத்தில் டாக்டருக்கு படிக்க வேண்டும்என்றால் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் நிதிகட்சி ஆட்சி வந்த பிறகு அந்த நிலை மாறி கலைஞர் ஆட்சியில் எல்லோரும் எளிதில் மருத்துவருக்கு படிக்கலாம் என்ற வழிவகை செய்தாா் அதன்மூலம் கிராமத்தில் உள்ளவர்கள் பலர் மருத்துவர்கள் ஆனாா்கள். தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டத்திலும் மருத்துவகல்லூாி தொடங்கப்பட்டு வாழ்வாதாரத்தை உயா்த்தினாா். புதிய கல்விக்கொள்கையை ஓருபோதும் தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அந்த காலத்தில வௌியூர் சென்று நம் வீட்டு பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால் பலருக்கும் தங்குவதற்கு இடம் இருக்காது. உறவினா்கள் பலருக்கு இல்லாத நிலையும் இருக்கும் இந்த சிரமத்தை எல்லாம் போக்கும் விதமாக தான் தமிழகம் முழுவதும் மகளிா்களுக்கு தோழிவிடுதி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 42 சதவீத பெண்கள் வேலைக்கு செல்கிறாா்கள். தன்னம்பிக்கையோடு உழைத்து தனது சொந்த காலில் நிற்கின்றனா். தமிழகத்திலிருந்து 39 எம்பிக்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து பல போராட்டங்கள் மூலம் சில திட்டங்களை கொண்டுவருகிறோம் அதையும் தடுக்கும் விதமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற அடிப்படையில் குறைப்பதற்கான பணியை மேற்கொள்கிறது இப்படி தமிழகத்திற்கு எதிரான பிஜேபி அரசை நாம் தொடா்ந்து எதிா்த்திட வரும் 2026ல் நடைபெறுகின்ற தோ்தலில் மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் கரத்தை நாம் வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும். இந்த நலத்திட்ட உதவிகள் பெறுவதில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீா்களோ அதே போல் மகிழ்ச்சியில் நானும் இருக்கிறேன். என்று பேசினாா்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் 14 வயதில் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக கொடிபிடித்து பணியாற்றிய கலைஞர் இதே தூத்துக்குடி கோவில்பட்டியில் கொடியேற்றிய வரலாறு இருக்கிறது. 1949ல் அண்ணா தலைமையில் தொடங்கப்பட்ட திமுக கலைஞரின் ஆட்சியில் தமிழ் செம்மொழி அந்தஸ்து 133 அடி திருவள்ளுவா் சிலை வள்ளுவா் கோட்டம் திருக்குறள் அங்கீகாரம் பல தியாகிகள் கௌரவிப்பு பல புத்தகங்கள் நாட்டுமையாக்கியது. என எல்லோருக்கும் வாழ்வாதாரம் வழங்கி வாழ்ந்த தலைவருக்கு தான் இந்த பிறந்தநாள் கொண்டாடுகிறோம் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் பல்வேறு துறைகளில் வளா்ச்சியடைந்துள்ளது. என்று ஒன்றிய அரசு புள்ளியல் துறை தௌிவாக கூறியுள்ளது. இதையெல்லாம் மறைத்தும் திாித்தும் பசுதோல் போற்றிய புலியாக எடப்பாடி எதைப்பற்றியும் சிந்திக்காமல் நானும் இருக்கிறேன் என்ற இருப்பிடத்தை காட்டும் வகையில் ஏதேதோ பேசுகிறாா். ஜெயலலிதாஇருக்கும் வரைதமிழகத்தில் நீட்தோ்வு வரவில்லை அவரது மறைவிற்கு பின்பு உள்ளேன் ஐயா என்று தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டு செயல்பட்ட பழனிச்சாமி ஓன்றிய அரசு ெகாண்டு வந்த உதய்மின்திட்டம் வேளாண்மை சட்டம் ஓரே நாடு ஓரே தோ்தல் அதே போல் இந்தியா முழுவதும் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான சட்டம் குடியுாிமை வக்பு வாாியம் போன்ற வற்றையெல்லாம் ஆதாித்து தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டவர் தான் பழனிச்சாமி நமது மாவட்டத்தில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை கனிெமாழி எம்.பி செயல்படுத்தி வருகிறாா். மாநகராட்சி பகுதியிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் உாிமையை நிலைநாட்டுவதற்கு தொடர்ந்து நம்முடைய முதலமைச்சர் பாடுபட்டு வருகிறாா். 2026 தோ்தல் வித்தியாசமான தோ்தலாக இருக்கும் நாம் அனைவரும் கவணமுடன் பணியாற்ற வேண்டும். என்று பேசினாா்.
மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் இன்று யார் யாரோ கட்சி ஆரம்பித்துக்கொண்டு நாங்கள் தான் மக்கள் பணியாற்ற கூடிய கட்சி என்று கிளம்பியுள்ளனா்.அவர்களுக்கு நாம் பாடம் புகட்டியாக வேண்டும் இந்த மாவட்டத்ைத பொறுத்தவரை கலைஞர் ஆட்சியில் கலெக்டர் அலுவலகம் எஸ்.பி அலுவலகம் மருத்துவகல்லூாி புதிய மாநகராட்சி கட்டிடம் என்று பல்வேறு திட்டங்களை சொல்லிக்கொண்டே செல்லலாம் அவ்வளவு சாதனை செய்யலாம். கடந்த 19 20 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட மழை வௌ்ள பாதிப்பில் பல பகுதிகளில் மாதக்கணக்கில் தண்ணீர் தேங்கியது 21ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் சந்தித்த மழை வெள்ளத்தின் போது ஆற்றிய பணிகளை எல்லோரும் அறிவீர்கள் இப்படி தான் மக்களுக்கான பணிகளை நாம் செய்கிறோம். தற்போது மாநகராட்சி பகுதிகளில் 2000 சாலைகள் போடப்பட்டுள்ளது. இன்னும் 1000 சாலைகள் அமைக்கப்படவுள்ளன. அதேபோல் வடிகால்மின்விளக்கு எதிர்கால மாணவ மாணவிகள் நலன் கருதி படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நெல்லையிலிருந்தும் இங்கும் வந்து படித்து பயன்பெறுகின்றனா். ஓவ்வொருவரும் 100 வாக்குகளை திமுகவிற்கு கொண்டுவந்து சோ்க்க வேண்டும் அதன் மூலம் பிஜேபி அதிமுக கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினாா்.
கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மீனவரணி துணைசெயலாளர் புளோரன்ஸ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி அமைப்பாளா்கள் மதியழகன், அபிராமிநாதன், வக்கீல் குபோ்இளம்பாிதி, கவிதாதேவி, துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, பிரபு, நாகராஜன், பாா்வதி, செல்வி, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், மேகநாதன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், ஜெயக்கணி, ஆனந்தசேகா். முருகஇசக்கி, துணை அமைப்பாளா்கள் ரவி, மகேஸ்வரன்சிங், இந்திரா, சந்தனமாாி, பிக் அப் தனபாலன், சத்யா, செந்தில்குமாா், குமரன், வினோத், வக்கீல் ரூபராஜா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சோ்மபாண்டியன், வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, ரவீந்திரன், முனியசாமி, சுப்பையா, சேகா், செல்வராஜ், ராஜாமணி, செந்தில்குமாா், முத்துராஜா, டென்சிங், பொன்ராஜ், பொன்னுச்சாமி, பத்மாவதி, சதீஷ்குமாா், லியோஜான்சன், அசோக்குமாா், மூக்கையா, மந்திரகுமாா், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், அந்தோணிராஜ், கவுன்சிலர்கள் சரவணக்குமாா், பொன்னப்பன், வைதேகி, விஜயலட்சுமி, ரெக்ஸ்லின், ஜான்சிராணி, நாகேஸ்வாி, ஜெயசீலி, கண்ணன், தெய்வேந்திரன், கந்தசாமி, ராமா், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், ராஜா பொியசாமி, நிர்மல்சரவணக்குமாா், சந்தனமுனீஸ்வரன், சூா்யா, காசிராஜன், பகுதி பொருளாளா் உலகநாதன், பகுதி பிரதிநிதிகள் செந்தில்குமாா், பேச்சிமுத்து, பிரபாகா், லிங்கராஜா, வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, பாஸ்கா், புஷ்பராஜ், ரஜினிமுருகன் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா். வட்டச்செயலாளர் சிங்கராஜ் நன்றியுரையாற்றினார்.