தூத்துக்குடி தமிழகத்தில் இந்து சமய அறநிலைதுறை சாா்பில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் திருக்கோவில்கள் இருந்து வருகிறது. அதை அதிகாாிகள் மற்றும் அறங்காவலா் குழு தலைவர்கள் உறுப்பினா்கள் நியமன பொறுப்போடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாகம்பிாியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோவில் நிா்வாகத்திற்குட்பட்ட மிகவும் பழமையான மேலூர் பத்திரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற தசரா சிறப்பு பூஜையில் பக்தர்களுடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தாா்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், உறுப்பினா் முருகேஸ்வாி மற்றும் மாாிமுத்து, ராஜ்குமாா் கேபிள் மணி உள்பட பலா் உடனிருந்தனா்.