தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இயங்கி வரும் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை காந்திய வழியில் ஊருக்கு பத்து பேர் இயக்கம் சார்பில் நடைபெற்ற காந்தி செயந்தி விழாவில் ஏ.பி.சி.வி.சண்முகம் சேவைகளைப் பாராட்டி 2026ம் ஆண்டுக்கான காந்திய விருது வழங்கப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் செயலாளர் காமாட்சி முருகன் வரவேற்றுப் பேசினார். பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முருகன் ஏ.பி.சி.வி.சண்முகத்துக்கு காந்திய விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார். வாசிப்பு நற்பணி மன்றம் தலைவர் கவிஞர் மாரிமுத்து மற்றும் ரவி, தொழிற்சங்கம் மேலாளர் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்