தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முனைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநில மக்கள் சிவில் உரிமை கழகத்திலிருந்து மதுரை மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகத்தின் பொறுப்பாளரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞருமான ஜான் வின்சென்ட் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டாா்.
பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை தெளிவாக எடுத்து கூறிய தேர்தல் அதிகாரி ஜான் வின்சென்ட் தேசிய மக்கள் சிவில் உரிமை கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் மாநில மக்கள் சிவில் உரிமை கழகத்தின் செயல்பாடுகளை உறுப்பினர்களுக்கு விளக்கினார் முன்னாள் எம்.பி அப்பாதுரை சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தலைவராக முனைவர் செல்வராஜ் மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் தெர்மல். சொ.ராஜா ஆகியோா் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மாவட்ட பொருளாளராக பிரின்ஸ் கர்டோசா துணை தலைவராக இசக்கிமுத்து துணை செயலாளராக முனைவர் அருள்ஒளி, மாநில குழு உறுப்பினர்களாக பாத்திமாபாபு, ராஜாபோஸ்ாீகன், நவமணி தங்கராஜ், மற்றொரு மாநில குழு உறுப்பினராக மாவட்ட தலைவர் செயல்படுவார் என்றும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனா். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தெர்மல் ராஜா நன்றி கூறினார்.