தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, ஐயா சின்னையா சிவந்தியாதித்தனார் அவர்களின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூரில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஐயாவின் புகழையும், சமூகப் பணிகளையும், சாதனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், அவரது பெருமைகளை தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் செல்வோம் என்றும் கூட்டமைப்பினர் உறுதி ஏற்றனர்.
இந்த நிகழ்வில் பி.எம். அற்புதராஜ், எஸ்.பி. மாரியப்பன், பிஜே. அற்புதராஜ், ஏ. பாலகிருஷ்ணன், பி. வேல்முருகன், கே.எஸ். அழகு மந்திரி, வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை, எஸ்.டி.கே. சிவா, எம். பிரசன்னகுமார், எம்.எம். டேவிட் உள்ளிட்ட கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.