தூத்துக்குடி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டும் சீரான குடிநீர் வழங்குவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேயா் ஜெகன் பொியசாமி எடுத்து வருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக வி.வி.டி பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வருகின்ற நீரின் அளவையும் அந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் மாநகர மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் சில பகுதிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு அந்தப் பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்கப்படும் என்றுமேயா் ஜெகன் பொியசாமி தொிவித்தாா்.
உடன் பகுதி செயலாளர் சுரேஷ்குமார், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமா் கவுன்சிலா் ராமு அம்மாள் உள்பட பலா் உடனிருந்தனா்.