தூத்துக்குடி மரக்குடி தெருவில் உள்ள புதுபித்த புனித செபஸ்டியார் கெபியை மாதா கோவில் பங்குதந்தை ஜான் செல்வம் திறந்து வைத்து இரண்டு பேருக்கு தையல் இயந்திரம் மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
புனித செபஸ்டியார் கெபியை புதுபித்து தந்த தொழிலதிபா் நிக்சன் புனித அந்தோணியார் கெபியை வழங்கிய சார்லி மிசியர், புனித செபஸ்டியார் கெபியை கட்டி தந்த மென்ட் லி கண்ஸ்ட்ரக்ஷனுக்கும் இரண்டு தையல் இயந்திரத்தை வாங்கி கொடுத்த சம்சன் மற்றும் பல நிதி உதவிகளை வழங்கினாா்கள்.
விழாவில் பங்கு துணைத் தலைவர் அண்டோ, இணைச் செயலாளர் பெனட், முன்னாள் செயலாளர் கென்னடி, ஜோசப், முன்னாள் பொருளாளர் ஜாய், ரவி, எட்வின் பாண்டியன், ஸ்பெல்மன், சசிக்குமார், வர்கீஸ் மற்றும் புனித செபஸ்டியாரின் இளைஞரணி மற்றும் மகளிரணியினா் கலந்து கொண்டனா்.