தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி 53 வது வார்டு முத்தையாபுரம் தெற்கு தெரு மெயின் ரோட்டையும் குறுக்கு சந்து பாதையையும் சிலர் 9 ஆண்டுகாலமாக ஆக்கிரமித்து உள்ளதால் ஆபத்து காலங்களில் தீயணைப்பு துறை வண்டியோ அல்லது 108 ஆம்புலன்ஸ் வாகனமோ உள்ளிட்ட எந்த வாகனமும் தெருவிற்கு வர முடியாமல் திருச்செந்தூர் மெயின் ரோடு தெரு சந்திப்பில் நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட வீட்டிற்கு வரும் போது வீடு முற்றிலும் எரிந்து சாம்பலாகிறது வீட்டிற்குள் உள்ள பொருட்கள் காப்பாற்ற முடியாமல் தீயில் எரிந்து விடுகிறது அவசர சிகிச்சைக்கு செல்ல முடியாமல் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு சிமெண்ட் ரோடு மற்றும் வடிகால் வசதி செய்து தர முத்தையாபுரம் தெற்கு தெரு ஊர் பொதுமக்கள் சார்பாக புரட்சி பாரதம் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் தலைமையிலும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் பிரபாகரன் முன்னிலையிலும் மாவட்ட கலெக்டாிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது
நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சி மாநகர் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் துணை செயலாளர் மகேந்திரன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெரினா பானு மாநகர் மாவட்ட உரிமை மீட்பு குழு செயலாளர் அருள்தாஸ் 53 வது வார்டில் குடியிருக்கும் முகமது காட்டுபா கனி ராஜ் புதிய தமிழகம் கட்சி தூத்துக்குடி மாநகர் துணைச் செயலாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.