தூத்துக்குடி மதுரை மாவட்டம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் குடியரசு தின மற்றும் பாரதியார் தின மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் தூத்துக்குடி காமாக்ஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் துர்கா ஸ்ரீதேவி 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 46கிகி எடை பிரிவில் தங்கப்பதக்கமும் ஹரி கோபாலகிருஷ்ணன் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 38கிகி எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வெற்றி பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான எஸ்ஜிஎஃப்ஐ தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இந்த இரு மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தமிழக அரசின் ஃபாம் 4 சான்றிதழ்களை பெற தகுதிபெற்றுள்ளார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் ஜூனியர் மகளிருக்கான 46கிகி எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வெற்றி பெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 2வது பெடரேசன் கோப்பைகான டேக்வாண்டோ போட்டியில் மாணவி செல்வ ஹரிணி கலந்து கொண்டு பள்ளிக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பயிற்சியாளர் ராமலிங்க பாரதியையும் பள்ளி செயலாளர் அருணாச்சலம் பள்ளி முதல்வர் மீனாகுமாரி துணை முதல்வர் சுப்புலட்சுமி உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களும் பாராட்டி வாழ்த்தினார்கள்.
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!!!