தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி நேற்று பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில், பால்குடம் எடுத்தல், கோலப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில், சிறுமிகளும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விதவிதமான கோலங்களை போட்டனர். இந்த கொடை விழா, அம்மன் மீதுள்ள பக்தியையும், ஊர் மக்களின் ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது. நாடார் உறவினருக்கு பாத்தியப்பட்ட
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழாவிற்கு அதன் நிர்வாக கமிட்டி சார்பில் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் அவர்களை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அழைப்புகள் விடுக்கப்பட்டது. அதன்படி கோவில் கொடை விழாவில் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மற்றும் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் மாநில பொருளாளர் எம்.எஸ்.டி ரவி சேகர், மாவட்ட செயலாளர் ஜெ. சாமுவேல் ராஜ், மாவட்டத் தலைவர்,
மாவட்டத் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிவா, நட்டத்தி ஒன்றிய செயலாளர் அலாட் குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார். கோவில் கமிட்டி சார்ந்தவர்கள், மற்றும் ஊர் பொது மக்கள் சார்பில் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் அவர்களுக்கு ஆளுயர மாலை, பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் அம்பாளை வழிபட்டனர். சின்ன கண்ணுபுரம் நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்றதுடன் விழாக்கோலம் பூண்டது…
தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது : பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பு!!!
