சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்காண்டுகளில் திராவிட மாடல் அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை மாபெரும் சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வெற்றிகளையும், விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று இந்திய மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு திராவிட மாடல் அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களே சாட்சிகளாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் 560 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்ட அரசு பெரியார் மருத்துவமனை, ரூ.240 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 1,000 படுக்கைகள் மற்றும் 15 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளை தொடங்கி வைத்தார். இதற்கு ரூ.206.08 கோடி மதிப்பீட்டில் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 6,23,765 புறநோயாளிகள் மற்றும் 2,14,591 உள்நோயாளிகள் பயனடைந்துள்ளனர். அதேபோல சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ரோபோடி அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு சிறுநீரகவியல், புற்றுநோய் அறுவை சிகிச்சை, நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு 336 நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழக மருத்துவ கட்டமைப்பு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது: ரூ.5,878 கோடியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம்
