தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் மின்சாரத்துறைக்கு அனுப்பிள்ள கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் மக்கள் அதிகமாக பேசும் பிரச்சினை அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு. மாநிலத்தின் மின்சார தேவையை சரியாக திட்டமிடாததால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அதிமுக முன்னாள் முதலமைச்சா் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மின்சாரம் என்பது சாதாரண சேவை அல்ல அது மக்களின் அன்றாட வாழ்க்கை உரிமை. மின்வெட்டு வந்தால் பாதிக்கப்படுவது வீடுகள் மட்டும் அல்ல. மாணவர்கள் படிக்க முடியாது. சிறு வியாபாரிகள் வேலை செய்ய முடியாது. மருத்துவ சாதனங்கள் பயன்படுத்தும் நோயாளிகள் அவதிப்படுவார்கள். வெயில் காலத்தில் முதியவர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் அரசு மற்றும் மின்சார வாரியம் மக்களுக்கு தெளிவாக பதில் சொல்ல வேண்டும். எப்போது மின்வெட்டு? ஏன் மின்வெட்டு? எவ்வளவு நேரம்? மாற்று ஏற்பாடு என்ன? இந்த நான்கு கேள்விகளுக்கும் பொதுமக்களுக்கு பதில் சொல்லப்பட வேண்டும். மக்களிடம் கட்டணம் வசூலிக்கும்போது கடுமை காட்டும் அமைப்பு, சேவை வழங்கும்போதும் அதே பொறுப்புடன் இருக்க வேண்டும். முன்னறிவிப்பு இல்லாத மின்வெட்டு நிறுத்தப்பட வேண்டும். பள்ளி, மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற அவசர சேவைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். பொதுமக்கள் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வெட்டு என்பது தொழில்நுட்ப பிரச்சினை மட்டும் அல்ல அது மக்களின் வாழ்வுரிமை பிரச்சினை என்பதே சட்ட உரிமைகள் கழகத்தின் கோரிக்கை கடந்த 2006 முதல் 2011 வரை இருந்த திமுக ஆட்சி மின்வெட்டு காரணமாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்பதை முதல்வர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும். மின்சாரதுறை அமைச்சர் நிர்மல்குமார் உடனடி ஆய்வில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும். என்று சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் கோாிக்கை மனுவில் கூறியுள்ளாா்.
மின்வெட்டு சாதாரண பிரச்சினை அல்ல மக்களின் வாழ்வுரிமை பிரச்சினை சட்ட உரிமைகள் கழக தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் மின்சாரத்துறை அமைச்சருக்கு கோாிக்கை